1 மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டு இல்லை

எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இவ்வாறு மின்துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் மின்வெட்டு 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மினவெட்டினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அவ்வாறே, கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின் துண்டிப்பு இடம்பெறுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்