எதிர் காலத்தில் உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்பு

நாடளாவிய ரீதியாக எதிர் காலத்தில் உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய விவசாய வணிக சபை எச்சரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சபையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வமான அதிகாரிகளுடன் பல சந்திப்புகள் இடம்பெற்ற போதிலும் உறுதியான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என தேசிய விவசாய வணிக சபை அறிவித்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில் பெரும்போகமும், ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் யால காலப்பகுதியினிலேயே அறுவடைகள் இடம்பெறுகின்றன.

எதிர்வரும் சிறுபோக காலப்பகுதியினில் 30 சதவீதமான உள்ளீடுகள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது மிகவும் பற்றாக்குறையாக உள்ளதனால், 2023 ஆம் ஆண்டிற்கான பெரும்போக அறுவடை மற்றும் நடுகை என்பனவற்றிற்கான தீர்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய ஏற்றுமதி கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு பொதுவாக 6 மாத காலப்பகுதி தேவைப்படுகிறது.

ஆனால், தற்போதைய நிலையில், கொடுப்பனவுகளை வழங்கி நாணய கடிதத்தினை திறப்பதற்கு மிக அதிக காலம் தேவைப்படுகின்றது.

ஏற்கனவே, எண்ணெய், எரிவாயு, மின்சார பற்றாக்குறையினை பொதுமக்கள் எதிர்கொள்கின்ற நிலையில், உணவு விநியோக நடவடிக்கைகளும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர, சுமார் சிறிய அளவில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படலாம் என தேசிய விவசாய வணிக சபை எச்சரித்துள்ளது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்