இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலை, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்து காண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சில இடங்களில் அதனை கலைப்பதற்காக பாதுகாப்பு தரப்பினரால் கண்ணீர் புகை மற்றம் நீர்தாரை பிரயோகம் என்பன நடத்தப்பட்டுள்ளன.
எனவே, அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை தவிர்ப்பதோடு விழிப்புடன் செயற்பட வேண்டும் என பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளிடம் கோரியுள்ளது.
அத்துடன் இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com