லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையை இலங்கையின் அனைத்து பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அத்தியாவசிய பொருளான அரிசி தொடர்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், பல்பொருள் அங்காடிகள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி அடுத்த வாரம் முதல் பல்பொருள் அங்காடிகள் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் குறித்த அரிசி கிடைக்கும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது நுகர்வோர் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோகிராம் அரிசி மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விநியோகிக்கப்படும் அரிசி வகைகளின் சில்லறை விலை
ஒரு கிலோகிராம் நாட்டரிசி – 145 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா அரிசி – 175 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





