இலங்கையில் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கையிருப்பு இருப்பதாகக் கூறி, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் தவறான அறிக்கைகளைப் பரப்புவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நிலவும் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி களுக்கு மத்தியில் இவ்வாறான அனைத்து அறிக்கைகளும் பொய்யானவை என நிரூபிக்கப்பட் டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இருந்ததாகவும், அதில் 6,500 மெட்ரிக்தொன் டீசல் நாளாந்தம் நுகர்வுக்குத் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பயணத் தேவைக்காக நாளாந்தம் 5,000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுவதாகவும், மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு 1,500 மெட்ரிக்தொன் எரிபொருள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க மேலதிகமாக மாதம் 100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரத்துக்குள் எண்ணெய் பற்றாக்குறையை நாடு சந்திக்கும். தற்போதைய நிலைமைக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவே பொறுப்பேற்க வேண்டும்.
மசகு எண்ணெயை அரசாங்கத்தால் பெற முடிந்தாலும், சுத்திகரிப்பு நிலையம் வழக்கமான செயற்பாடுகளை ஆரம்பிக்க 12-15 நாட்களுக்கு மேலாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com