வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் நடவடிக்கைளில் பாரியளவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பனவற்றினால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் அந்நிய செலாவணித் தொகை குறைந்துள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான மூலங்களில் ஒன்றான வெளிநாடுகளில் பணியாற்றுவோர் அனுப்பும் பணத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 325.2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்த தொகை 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
அதேபோன்று கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்நிய செலாவணி வருமானம் 60 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 812.7 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் 2021ம் ஆண்டு அந்த தொகை 325.2 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2020ம் ஆண்டில் 7193.9 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இது 2021ம் ஆண்டு 5491 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை, சட்ட ரீதியான வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்குமாறு மத்திய வங்கி பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com
🛒 Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱