(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. வரிக்குறைப்பு செய்தமை தவறான தீர்மானமாகும்.
சமூக கட்டமைப்பில் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்னும் 2 வருட காலத்தின் பின்னராவது தீர்வு காண முடியுமா என குறிப்பிட முடியாது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நடைமுறையில் உள்ள வரவு – செலவு திட்டம் யதார்த்த நிலைமைக்கு பொருந்தும் வகையில் அமையவில்லை. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவு திட்டம் மறுசீரமைக்கபட்டு வரி வருமானம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என நிதி மற்றும் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்து அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை சிறந்தது, அதனை ஏறறுக்கொள்கிறோம் எனவும் அவர் சபையில் குறிப்பிட்டார்.
சபாநாயகர் தலைமையில் புதன்கிழமை (4 ) கூடிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மை குறித்து சபையில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போதைய நிலைமையில் எவரையும்,எந்த அரசாங்கத்தையும் குறைக்கூற முடியாது. சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எரிபொருள்,மருந்து மற்றும் எரிவாயு ஆகிய சேவை விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமையினை முகாமைத்துவம் செய்யாவிடின் அது பாரிய விளைவினை ஏற்படுத்தும்.
தற்போதைய தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றினைநது செயற்பட வேண்டும். தென்கொரியா,இந்தியா ஆகிய நாடுகளின் ஆரம்ப கால பொருளாதார நிலைமையினை ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு தற்போதைய நிலைமையினை முகாமைத்துவம் செய்யாவிடின் வெனிசுலா,லெபனான் ஆகிய நாடுகளின் நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும்.
நாட்டின் அரச வருமானத்திற்கும்,அரச செலவிற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. 2021ஆம் ஆண்டு அரச வருமானம் 15,000 பில்லியனாக காணப்பட்ட போது அரச செலவினம் 3,522 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. மறுபுறம் புனரமைக்கப்பட்ட கடன் 2,748 பில்லியன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மொத்த தேசிய வரி வருமானம் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளத. 1981, 1982 மற்றும் 1983ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வரி வருமானம் 25 சதவீதமாக காணப்பட்ட, பிற்பட்ட காலப்பகுதிகளில் வரி வருமானம் கட்டம் கட்டமாக வீழ்ச்சியடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டு வரிவருமானம் 8.1 சதவீதமாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு அரச சேவையாளர்களுக்கு சம்பளம் செலுத்த 845 பில்லியனும், ஓய்வூதியம், சமுர்த்தி,பாடசாலை சீருடை உட்பட நலன்புரி திட்டங்களுக்காக 595 பில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது.
நாட்டின் வெளிநாட்டு கடன் பொருளாதார நெருக்கடிக்கு பிறிதொரு காரணியாக அமைந்துள்ளது.தற்போது மொத்த அரசமுறை கடன் 53 பில்லியன்களாக உயர்வடைந்துள்ளது.
1954ஆம் ஆண்டு இலங்கை முதன் முறையாக 06 மில்லியன் அரசமுறை கடனை பெற்றுக்கொண்டுள்ளது. 2015ஆம் ஆண்டு 2 பில்லியன், 20161.6 பில்லியன், 2017ஆம் ஆண்டு 2.4 பில்லியன், 2018ஆம் ஆண்டு 3 பில்லியனும், 2019ஆம் ஆண்டு 4.5 பில்லியனும், 2020ஆம் ஆண்டு 4 பில்லியனும், 2021ஆம் ஆண்டு 4 பில்லியன் அரசமுறை கடன்கள்ட செலுத்தப்பட்டுள்ளன.
சமூக கட்டமைப்பில் எரிபொருள்,எரிவாயு மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு வருட காலத்திலாவது தீர்வு காண முடியுமா என குறிப்பிட முடியாது.தற்போதைய பிரச்சினை 10 அல்லது 15 வருட காலத்திற்கு நீடிக்காமலிருக்க பாராளுமன்றில் உள்ள சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பினை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம் வரி குறைப்பு செய்தமை தவறானதாகும்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் யதார்த்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமையாது. ஆகவே வரவு-செலவு திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியினை தீவிரப்படுத்தியுள்ளது. அரசியல் நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியும்.
ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நீண்ட கால கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை வரவேற்கத்தக்கது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளமை சிறந்தது.
18 மாத காலத்திற்கு சகல தரப்பினரையும் ஒன்றினைத்து புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்து அதனை தொடர்ந்து 5வார காலத்திற்குள் தேர்தலை நடத்தி தீர்வு காணுமாறு குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள கூடியது என்றார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





