லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது.

அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு லிட்ரோ நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

லிட்ரோ நிறுவனத்தினால் நாளாந்தம் சுமார் 110,000 எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

எனினும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்