இலங்கையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நேபாள வலுசக்தி, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசன துறையினருடன் இணைந்து முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இலங்கையில் உள்ள நேபாள தூதுவராலயம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பன இணைந்து மேற்கொண்ட மாநாட்டின் மூலம் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த துறை தொடர்பாக இலங்கை நிறுவனங்கள் கொண்டுள்ள விசேட தகைமைகள் காரணமாக நேபாளத்தில் சிறப்பான முறையில் முதலீடு செய்ய முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள பரந்த நீர் வளங்கள், நீர்மின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒரு சிறந்த இடமாக அமைந்துள்ளதாக நேபாளத்திற்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நேபாளம் 42,130 மெகாவட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய தகைமையை கொண்டுள்ள போதிலும், தற்போது 1,476 மெகாவட் மின்சாரம் வலு மட்டுமே உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





