முதன்மைப் பணவீக்கம் அதிகரிப்பு – மத்திய வங்கி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12.1 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது

அத்துடன் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கம் தூண்டப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கமைய உணவுப் பணவீக்கம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 22.1 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 7.5 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 9.2 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்