மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள பால்மாவின் விலை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்கப் பரிசீலித்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 300 ரூபாவாலும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 120 ரூபாவாலும் அதிகரிக்கப்படுமெனச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 5 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளமையால் உள்ளூர் சந்தையில் பால் மாவின் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இதுதொடர்பில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்