இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் நெருக்கடி ஏற்பட்டது மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இலங்கைக்கான சுற்றுலாவை விரைவில் முடிவிற்கு கொண்டுவர வேண்டியிருக்கும் என ஜேர்மனியைச் சேர்ந்த தனது யூடியுப்பில் தெரிவித்துள்ளமை பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த கென் என்பவரே தனது யூடியுப் வீடியோவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்ளும்போது நீங்கள் பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனத் தெரிவித்துள்ள அவர் ஆனால் இலங்கையில் இந்தச் சவால்கள் மோசமடை கின்றன – நான் இங்கிருந்து வெளியேற நினைக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளாந்தம் 6 முதல் 8 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது,நான் மாத்திரமல்ல பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன – நெருக்கடியில் உள்ளன என ஜேர்மனியைச் சேர்ந்த கென்ட் தனது யூடியுப்பில் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்படுவதால் எனது மடிக்கணினியை சார்ஜ் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக வைபை இல்லை,மாலை நேரங்களில் நிலைமை இன்னமும் மோசமானதாக காணப்படுகின்றது என அவர் யூடியுப்பில் பதிவிட்டுள்ளார்.
பல உணவகங்கள் இயங் கமுடியாததால் மூடப்படுகின்றன-என்னால் கடற்கரையில் அமர்ந்திருக்க முடியும் அது பிரச்சினையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நான் எனது தொழிலுக்காக மடிக்கணினியை பயன்படுத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்- கென் சமூக ஊடக நிபுணராக பணியாற்றுகின்றார் என அவரது இணையத்தளம் தெரிவிக்கின்றது.
அவர் ஆசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்- தனது யூடியுப் சனல் மூலம் பணம் சம்பாதிக்கின்றார்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர் கென்.
நான் முறைப்பாடு செய்ய விரும்பவில்லை எனத் தெரிவிக்கும் அவர் ஏன் இலங்கையில் இவ்வாறு நடக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் ஏன் இந்த நேரத்தில் மின்வெட்டு காணப்படுகின்றது என அறிய ஆவலாக உள்ளேன்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் இங்கிருந்து வெளியேறுவது குறித்து கவலையடைகின்றேன்- நீங்கள்மிகவும் பணிவான, எனக்கு மிகவும் பிடித்த யூடியுப் புளொக்கர் என விமுக்தி மாயதுன்ன என்பவர் பதிவிட்டுள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com