‘ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல்’ தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
16 விதிகள் அடங்கிய இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், இலங்கைக்கு வெளியில் ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் அல்லது வழங்கப்படும் பணிகள் தொடர்பில், கப்பலேற்றும் அல்லது பணிகளை வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களினுள் ஏற்றுமதிப் பெறுகைகளை கட்டாயமாக இலங்கையில் பெறுதல் வேண்டும்.
அத்தகைய பெறுகைகளைப் பயன்படுத்தி இலங்கையில் கிடைக்கப்பெற்ற ஏற்றுமதிப் பெறுகைகளின் எஞ்சியதை, தொடர்ந்து வருகின்ற மாதத்தின் ஏழாவது நாளனறு அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக கட்டாயமாக மாற்றுதல் வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டில் உள்ள ஒருவரிடமிருந்து, இலங்கையில் உள்ள ஒருவருக்கு வெளிநாட்டுச் செலாவணியில் கிடைக்கப்பெற்ற கொடுப்பனவும் ஏற்றுமதிப் பெறுகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதாவது, இலங்கைக்கு வெளியில் வதிகின்ற ஆளொருவருக்கு வழங்கப்பட்ட தொழில்சார், வாழ்க்கைத்தொழில், தொழில் அல்லது வியாபாரப் பணிகள் உள்ளடங்கலாக வழங்கப்படும் பணிகளுக்காக, இலங்கையில் வதிகின்ற ஆளொருவருக்கு வெளிநாட்டுச் செலாவணியில் கிடைக்கப்பெற்ற கொடுப்பனவும் ஏற்றுமதிப் பெறுகைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com