எதிர்காலத்தில் மதுபானத்தின் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை அரசாங்கம் பெறாமல் போகும் அபாயம் உள்ளது.
நாட்டில் உள்ளூர் மதுபான உற்பத்திக்குத் தேவையான எத்தனோல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கடும் தடைகளே இதற்குக் காரணம் என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலை தவிர்க்கப்படாவிட்டால் கலால் வருவாயிலிருந்து அரச ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது உட்பட பல செலவுகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தற்போது, நாட்டிலுள்ள ஐந்து முக்கிய மதுபான ஆலைகளுடன் இணைந்து உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் அந்த தனியார் நிறுவனங்களும் அவற்றின் உற்பத்திக்கான கட்டுப்பாடுகள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
எத்தனோல் உற்பத்திக்கான மூலப்பொருள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்ய தடை ஏற்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com