நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதானால், வீதி நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பாளர்களுடன் நேற்றிரவு இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதீட்டில் துண்டு விழும் தொகை காணப்படுகிறது.
அதனை ஈடு செய்வதற்காக கடன் பெறப்படுகிறது.
கடன் பெறுவதோடு சில பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.
பெறப்படும் கடனை செலவிடும் போது வெவ்வேறு விடயங்கள் கையாளப்படுகின்றன.
நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலையில் எந்த விடயங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும், எந்த விடயங்களை இடை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
வைத்தியசாலை உள்ளிட்ட தேவைகளுக்கு முன்னுரிமையளித்தல் கட்டாயமாகும்.
எனினும், தற்போது வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இல்லை.
அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற போதிலும் தற்போது முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து கருத்துரைத்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனைகளை முன்வைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com