பெப்ரவரி முதலாம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின் தடைகள் எதுவும் இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவரான ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
பெப்ரவரி 1ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடியது.
மூன்று அனுமானங்களின் அடிப்படையில் இரண்டு முதல் ஒன்பது மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட நாளாந்த மின்வெட்டை விதிக்க ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருந்தது.
தற்போதுள்ள எரிபொருள் இருப்புகள் மற்றும் அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதி கள் பற்றிய தகவல்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com