பிரத்தியேக வகுப்புகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட பிரத்தியேக வகுப்புகளுக்கு நேற்று (01) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, துறை சார் விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளை நடத்துதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை பகிர்ந்தளித்தல், இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஒழுங்கு விதிகளை மீறுவோர் தொடர்பில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அல்லது பரீட்சைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்காக 29 வைத்தியசாலைகளில் உயர்தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்கள் இந்த பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்