பாசிக்குடா சுற்றுலா வலய திட்டம்!

எதிர்வரும் 3 மாத காலப்பகுதியில் தயாரிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வலயத்தில் முதலீட்டாளர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட காணிகளில் விருந்தகங்களை நிர்மாணிக்க தவறியவர்களிடமிருந்து காணியை மீளபெற்று புதிய முதலீட்டாளர்களிடம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அழகிய கடற்கரையை கொண்டுள்ள இடங்களில் பாசிக்குடாவும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

156 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ள பாசிக்குடா வலயத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் 12 புதிய நட்சத்திர அந்தஸ்தை கொண்டுள்ள விருந்தகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மீள பாசிக்குடா வலயத்தை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கவரமுடியும் என அமைச்சர் பிரசன்னா ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்