பதவி விலகுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படாவிடின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமரோ, நிதியமைச்சரோ இல்லை, நாடாளுமன்றம் செயற்படாத நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மாத்திரம் உள்ள ஒரு செயலிழந்த நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையான அரசாங்கமொன்று விரைவில் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இது 225 மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறந்த முறையில் பேணக்கூடிய அரசாங்கமொன்றை நியமிப்பது இன்றியமையாதது என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் இவ்வாறான ஸ்திரமான நிலைமையை ஏற்படுத்த முடியாவிட்டால் நாடு மேலும் சீர்குலையும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேலான மின்வெட்டு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படாவிட்டால் தாம் பதவியில் இருந்து விலகுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்