பதப்படுத்திய உணவு வகைகள். அவதானமாக இருக்கவும்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

துர்நாற்றம், நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப் பட்ட உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது கொள்வனவு செய்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இறைச்சி மற்றும் பாலை தொடர்ந்து விற்பனை செய்த 387 கடைகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

7 மணி நேர மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகள் செயற்படாததால் உணவுப் பொருட்கள் பழுதடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் பொறுப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்