நெல் கொள்வனவு இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்னர்.

வடமேல் கமநல சேவை அமைப்பின் பிரதிநிதிகள், இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறியப்படுத்தியதை அடுத்து, உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய, கணக்காய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், குறித்த களஞ்சியங்களில் சுமார் 15 இலட்சம் கிலோகிராம் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 3 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகளவான நெல், விலங்கு உணவுக்காக பயன்படுத்துவது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்திய வடமேல் பிராந்திய பதில் முகாமையாளரும், அந்தக் களஞ்சியங்களின் உதவிப் பொறுப்பாளரும் இவ்வாறு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த இரு நெல் களஞ்சியங்ளும், அதிகளால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்