நாட்டில் தற்போது டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் பெற்றோலுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லையெனவும் மின்சாரம் மற்றும் வலுசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற (05) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் தொன் (MT) டீசல் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 1,000- 1,500 மெட்ரிக் தொன் டீசல் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம்.
அடுத்த டீசல் ஏற்றிய கப்பல் மே 11 ஆம் திகதி நாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் 2 நாட்கள் தாமதமாகியே டீசல் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது.
நாளாந்தம் ஏறக்குறைய 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுகிறது. பெற்றோல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நேற்றிரவு இலங்கைக்கு வந்ததது என்றார்.
அத்தோடு, நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, டீசலை பதுக்கிவைக்கவோ அல்லது தேவையான அளவுக்கு மேல் கொள்வனவு செய்யவோ வேண்டாமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





