தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை

விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு கோரி நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, காலி முகத்திடலில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு இன்றுடன் ஒருமாத காலம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்