தலையில் இரட்டை சுழி இருந்தால் இதுதான் அர்த்தமா…

பொதுவாக தலையில் இரட்டை சுழி இருந்தால் உடனே நமது முன்னோர்கள் பல கதைகளை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

இவ்வாறு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும், அதிகமாக சேட்டை செய்வார்கள், என்றெல்லாம் சொல்வதை கேள்விப்ப்டிருப்பீர்கள்.

ஆனால் இது உண்மைதானா? அல்லது இதற்கு பின்னால் வேறெதுவும் அறிவியல் காரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரட்டை சுழிகள் அப்படியே இருக்கும். சில குழந்தைகள் வளர்ந்தவுடன் அந்த சுழிகள் மாறிவிடும்.

எல்லோருக்கு இவ்வாறு இரட்டை சுழி இருப்பதில்லை. குறிப்பிட சிலருக்கு மாத்திரமே இவ்வாறு இருக்கும். NHGRI ஆய்வுகளின் அடிப்படையில் உலக மக்கள் தொகையில் 5% மக்களுக்கு மாத்திரமே இரட்டை சுழி இருக்கின்றது.

அறிவியலின் அடிப்படையில் ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணுவே முக்கிய காரணமாக அமைகின்றது.

தாத்தா , பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் அல்லது முதல் திருமணம் நிச்சயித்து பின் ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இரண்டாவது திருமணம் நிச்சயிக்கப்படலாம். என கூறப்படுவதற்கு பின்னால் எந்த ஆதாரமும் காணப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால் ஒருவருக்கு இரட்டை சுழி இருந்தால் அவர்கள் சின்ன விஷயத்தையும் போராடி தான் பெற வேண்டியிருக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் பிறந்ததிலுருந்து தனியாக வாழ கூடியவர்களாக இருப்பார்கள். அதாவது பெற்றோர்களை பிரிந்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் நேரடியாக எதையும் பேசுபவர், பொறுமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர், ஒருவருக்கு கஷ்டம் எனில் முதலில் உதவும் மனபாங்கு இவர்களுக்கு இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

சிறப்புச் செய்திகள்