இலங்கையில் இன்று ஒரு டாலர் 38 ரூபாயால் அதிகரித்துள்ளது

புலம்பெயர் தொழிலாளர்களினால் நாட்டுக்கு அனுப்பப்படும் அமெரிக்க டொலர்களுக்காக வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக ஒரு அமெரிக்க டொலருக்காக தற்பொழுது வழங்கப்படும் 10 ரூபாவை 38 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

01. வெளிநாட்டு பணவரவுகளை அதிகரிப்பதற்காக ஊக்குவிப்புக்களை வழங்கல்

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம் வருடாந்தம் 7-8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எமது நாட்டுக்குப் பணவரவாகக் கிடைக்கின்றது.

அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் அந்நிய செலாவணியை எதிர்வரும் புதுவருட காலத்தில் எமது நாட்டுக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவித்தல், புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கு அதிக பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10/- ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38/- ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான ஊக்குவிப்பு தொகை அதிகரிப்பு!

புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம், வருடாந்தம் 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கின்றது.

அவ்வாறு புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு பண அனுப்புதலை ஊக்குவிப்பதற்காக ஒரு டொலருக்கு 10 ரூபா ஊக்குவிப்பு தொகை இதுவரை வழங்கப்பட்டது.

இந்தநிலையில் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாட்டுக்குப் பணம் அனுப்புதலை ஊக்குவித்தல் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை பாராட்டுதல் போன்ற காரணிகளுக்காக குறித்த ஊக்குவிப்பு தொகையை 38 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தொழில் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்