சூப்பர் ஸ்டார் மறுத்ததால் ரூட்டை மாத்திய லைக்கா.

இந்தியன் 2 படம் முடிவடைந்து விட்டது ஒரே ஒரு பாட்டு மட்டும் மீதம் இருக்கிறது. அது மிகவும் பிரம்மாண்ட செலவில் எடுக்கப் போவதால் இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளனர். அதற்காக கமலஹாசன் 10 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் முடித்துவிட்டு கோலாகலமாக இந்த மாதத்தில் ஆடியோ லான்ச் வைக்கப் போகிறார்கள். அதற்காக பெரிய தலைக்கட்டு யாரை அழைப்பது என்று சங்கர் மற்றும் லைக்கா யோசித்து வருகின்றனர். அவர்கள் லிஸ்டில் ரஜினி பெயர்தான் முதலில் இடம் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் மறுத்ததால் ரூட்டை மாத்திய லைக்கா
ரஜினி இப்பொழுது வேட்டையன் படத்தில் படு பிசியாக இருப்பதால் மறுத்துவிட்டார். அதுபோக கமலஹாசன்.இருப்பதால் வேறு யாரும் வேண்டாம் என்று சங்கர் கூறி வந்தார். யாரையாவது அழைத்து வந்தால் தான் படத்திற்கு பெரிய அளவில் பிரமோஷன் மற்றும் பிசினஸ் இருக்கும் என்று கமல் ஐடியா கொடுத்துள்ளார்.

இப்பொழுது சங்கர் தெலுங்கு சினிமாவையே கைக்குள் வைத்திருக்கும் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணை அழைக்கும் எண்ணத்தில் இருக்கிறார். அப்படியே ராம்சரனின் கேம் சேஞ்சர் படத்திற்கும் இது உதவும் என மனக்கணக்கு போட்டு வருகிறார்.

ஆனால் இந்தியன் 2 படத்தில் அந்த பிரம்மாண்ட பாடல் காட்சி எடுத்த பிறகு இது அரங்கேறும். லைக்கா கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. பிரம்மாண்டமாய் எடுக்க போகும் அந்த பாட்டுக்கு பணம் சேகரிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் லைக்கா சுபாஸ்கரன்.

சிறப்புச் செய்திகள்