சுவிஸிலிருந்து இலங்கை ரூபாவுக்குத் தவறான பணமாற்றுப் பெறுமதி வழங்கப்படுவதாக , சுவிட்சர்லாந்தில் உள்ள நிதிநிபுணர்கள் தெரித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சுவிஸ் பிராங்குக்கு 271 இலங்கை ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான ரூபாய்களை சுவிட்சர்லாந்தில் அரச அனுமதியுடன் இயங்கும் பணமாற்று நிறுவனங்கள் பதிவு செய்தது.
இந்த நிலையில் 10 ஆம் திகதி இலங்கை அரசு ஒரு அமெரிக்க டாலருக்கு 58 ரூபாய்களை அதிகரித்ததையடுத்து இலங்கை ரூபாயின் பணப்பெறுமதி குறைக்கப்பட்டது.
இதற்கமைவாக இலங்கையில் 202 இல் இருந்த அமெரிக்க டொலரின் விலை 260 ஆக உயர்த்தப்பட்டது, ஆனால், சுவிஸில் உள்ள பணமாற்று நிறுவனங்கள் சுமார் 12 ரூபாய்களை மட்டுமே அதிகரித்தது, நேற்று திங்கட்கிழமை ஒரு சுவிஸ் பிராங்குக்கு 300 ரூபாய் தொடக்கம் 314 ரூபாய்கள் வரை வழங்க முன்வந்துள்ளது.
பணமாற்று நிறுவனங்கள் நேற்று 37 ரூபாய் மட்டுமே அதிகமாக வழங்க முன் வந்துள்ளமையை கருத்தில் கொண்டு இங்குள்ள மக்கள் இதனை அதிக தொகை எனக் கருதி பணம் அனுப்ப முனைகின்றனர் ஆனால் , இது பணமாற்று நிறுவனங்களின் கணக்கின் அடிப்படையில் அதிக தொகை அல்ல. இலங்கையில் டொலருக்கு 58 ரூபாய்கள் அதிகரித்தால், சுவிஸ் பிராங்குக்கு 62 ரூபாய்களை அதிகரித்தலே சரியான பெறுமானமாக இருக்கும் என நிதிநிபுணர்களின் கணக்காக உள்ளது.
ஆனால், இதுவரை அப்படி அதிகரிக்கப்படவில்லை, மாறாக சுவிஸ் பிராங்கின் நாணயப்பெறுமதி ரஸ்ய -உக்கிரைன் யுத்தத்தின் பின்னர் மேலும் அதிகரித்துள்ளது, இதனையும் கணக்கில் கொண்டால் ,சுவிஸ் பிராங்குக்கான ரூபாய் பெறுமதி மேலும் அதிகரிக்கப்படவேண்டும்.
இதன்படி ஒரு சுவிஸ் பிராங்குக்கு 335 இலங்கை ரூபாய்களுக்கும் அதிகமாகச் செல்ல வேண்டுமென்பது சுவிட்சர்லாந்தில் உள்ள நிதி நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.
மக்கள் தங்களின் பெறுமதி மிக்க உழைப்பின் பலனாக பெற்றுக்கொள்ளும் சுவிஸ் பிராங்குகளுக்குச் சரியான பெறுமதியைப் பெற்றுக்கொள்ளலே நியாயமானது எனும் கருத்தை நிதி ஆலோசகர்கள் முன்வைக்கிறார்கள்.
இந்தநிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறுவனம் ஒன்று , இன்று செவ்வாய்க்கிழமை குறுகிய காலத்தில் தமது நிறுவனத்தில் பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு 5 கிலோஅரிசி இலவசம் என அறிவித்துள்ளமையின் பின்னணி தொடர்பாக மக்கள் விழிப்படைய வேண்டும்.
இதுவரையும் இங்குள்ள வார்த்தக நிலையங்களிலேயே 50 அல்லது 100 சுவிஸ் பிரங்குகளுக்கு மேல் பொருட்களை கொள்பனவு செய்பவர்களுக்கு 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வந்த நிலையில், அரச அனுமதி பெற்ற பணபரிமாற்ற நிதிநிறுவனம் ஒன்றின் இத்தகைய செயற்பாடானது பலகோணங்களில் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com