சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு.

இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தையும் பாராட்டியுள்ளது.

இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் முடித்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் கடனைக் குறைக்கவும் நம்பகமான மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கான அவசரத்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் அதற்கு பின்னரான கொவிட்-19 பரவல், முடக்க நிலை காரணமாக 2020ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவீதத்தினால் சுருங்கியது.

இந்தநிலையில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தல் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போது பொருளாதார மீட்சி காணப்படுகின்ற போதிலும் நாடு அதிகரித்து வரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் கடனைக் குறைக்கவும் நம்பகமான மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கான அவசரத்தையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் உயர் வருவாய் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிதி ஒருங்கிணைப்பின் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இறுக்கமான நாணயக் கொள்கை அவசியம் என்பதை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையின் வளர்ச்சியை மேம்படுத்தும் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளதோடு பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிப்பது மற்றும் இளைஞர்களின் வேலையின்மையை குறைப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தவும், இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றவும், முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் மேலும் முயற்சிகள் தேவை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்