இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் மாயமானது. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் பெலன்கிம் அரண்மனை உள்ளது. சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை ஆகும். இங்கு வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தினால் செய்யப்பட்ட டாய்லெட் வைக்கப்பட்டிருந்தது. இதனை திடீரென காணவில்லை. 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்டது இது. இதன் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் ஆகும்.
போலீசார், கூறுகையில்; இந்த அருங்காட்சியகத்தில் டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதுடன் தண்ணீரும் கசிவு வெளியே வந்தது. இதனையடுத்து டாய்லெட் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பணியாற்றிய ஒருவர் மாயமானார். இவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
தங்க டாய்லெட் திருட்டு போனதால் அரண்மனையை அடைக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.லண்டனில் தங்க டாய்லெட் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. – (செப் 14, 2019)
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com