சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 16 ஆயிரம் கிலோ பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 16000 கிலோ பீட்ரூட் தொகை சுங்கப்பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு இறக்குமதி எனக் கூறியே குறித்த பீட்ரூட் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 30 இலட்சம் என சுங்க திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான குளிர்சாதனப் பெட்டிகள் அடங்கிய கொள்கலன்களிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதுடன் வத்தளையில் உள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 53000 கிலோ உருளைக்கிழங்கு தொகையொன்றினையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவை மிகவும் நுட்பமான முறையில் கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக தெரிவித்ததுடன் இது பற்றிய மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்