‘டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை’ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை ( digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜிற்றல் கட்டமைப்பு வசதி இதன் மூலம் கிடைக்கும்.
தேவையான சந்தர்ப்பங்களில் எந்தவொரு சிக்கலும் இன்றி உரிய ஆவணங்களை டிஜிற்றல் முறையின் கைத்தொலைபேசி ஊடாக வழங்கும் வாய்ப்பு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com