கொழும்பில் வியாபார நிலையங்களில் பரிசோதனை

கொழும்பு நகரில் உணவு மற்றும் பானங்கள் மீதான பரிசோதனை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதற்காக 49 பொதுப் பரிசோதகர்கள் மற்றும் 6 வைத்திய அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

மேலும், மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்யும் வியாபாரி களுக்கு எதிராக உணவுச் சட்டத்தின் கீழ் கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதியிடப்பட்ட உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்யும் போது காலாவதியான, தரமற்ற மற்றும் மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்பவை குறித்து லேபிளில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களை மருத்துவர் விஜேமுனி கேட்டுக்கொள்கிறார்.

கலப்பு மசாலாப் பொருட்கள் சந்தையில் கிடைக்கக்கூடும் என்பதால், அவற்றை வாங்கும் போது நிறம் மற்றும் மணத்தில் அதிக கவனம் செலுத்துமாறும் மக்கள் வலியுறுத்தப்படு கிறார்கள்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்