கள்ளச்சந்தையில் பெற்ற டொலர்களை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தோம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதியில் கள்ளச்சந்தை மூலம் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என நிதியமைச்சர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சண்டே திவயினவிற்கு வழங்கிய பேட்டியில் நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

கள்ளச்சந்தையில் பெறப்பட்ட பணத்தை பயன்படுத்தி இலங்கை வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றது என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

அக்காலப்பகுதியில் எரிபொருள் கொள்வனவிற்கு செலுத்துவதற்காக கள்ளச்சந்தையில் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை எரிபொருள் கப்பல்களிற்கு செலுத்துவதற்கு இலங்கைக்கு டொலர் தேவைப்பட்டது,என தெரிவித்துள்ள நிதியமைச்சர் அக்காலப்பகுதியில் தானும் அதிகாரிகளும் புறக்கோட்டைக்கு சென்று கள்ளச்சந்தையில் டொலரை பெறுவதற்காக அங்குள்ள வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் புறக்கோட்டை வர்த்தகர்களை சந்திப்போம் அவ்வாறே நாங்கள் எரிபொருள்களிற்கு கட்டணத்தை செலுத்தினோம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைபெற்றதை அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை என சுட்டிக்காட்டியுள்ளஆங்கில செய்தி இணையத்தளமொன்று நிதியமைச்சர் அமெரிக்க அதிகாரிகளினால் விசாரணை செய்யப்படக்கூடியசூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வடகொரியா பொருளாதார தடைகளில் இருந்துதப்புவதற்காக கிரிப்டோ நாணய மூலம் உதவியதற்காக அமெரிக்க பிரஜையொருவர் விசாரணைகளை எதிர்கொண்டதை ஆங்கில இணையத்தளம்சுட்டிக்காட்டியுள்ளது.

அவருக்கு இந்த மாதம்தண்டனை வழங்கப்படவுள்ளது அவருக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும் குற்றத்தின் சிறிய பகுதியேஅம்பலமாகியுள்ளது என புலம்பெயர் செயற்பாட்டாளர் ஜன் ஜனநாயகம் தெரிவித்துள்ளார்.

தடைகள் விதிக்கப்பட்ட வடகொரியா ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியே தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை இடம்பெற்றது என நாங்கள் நீண்டநாட்களாக கருதிவந்துள்ளோம் என டக் எனப்படும் இனப்படுகொலைக்கு எதிரான என அமைப்பின் ஜன் ஜனநாயகம்தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமாக பெறப்பட்ட கொத்துக்குண்டுகள் இரசாயன ஆயுதங்கள் போன்றவை அவற்றின் இலக்காக இருந்த தமிழ்மக்களிற்கு எதிராக ஈவிரக்கமற்ற முறையில் பயன்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 24மணி நேரத்துக்குள் 🇱🇰இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளின் வீட்டுவாசலில் அத்தியவசிய பொருட்கள் கொடுக்க நாங்க ரெடி! hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்