பேரதிஷ்டம் கனடாவில் அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 1400 கோடி ரூபா பரிசு வென்ற யாழ்ப்பாண தமிழர்! கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவர் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் 70 மில்லியன் டொலர்களை (1419.72 கோடி இலங்கை ரூபா) வெற்றி பெற்றுள்ளார்.
பொன்னுத்துரை மனோகரன் (54) என்பவரே, Lotto Max அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
பொன்னுத்துரை மனோகரன் பொன்னுத்துரை, தனது தந்தையின் கனவுகளால் ஈர்க்கப்பட்டு 30 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுச்களை வாங்கிவருவதாகத் தெரிவித்தார்.
“ஒரு நாள் ‘பெரிய’ வெற்றியைப் பற்றி நான் பல கனவுகளைக் கொண்டிருந்தேன் என அவர் தெரிவித்தார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 2,800 டொலர் பரிசு வென்றார். ஆனால் அது அவர் எதிர்பார்த்த வெற்றியல்ல.
டிசம்பர் 17ஆம் திகதி சீட்டிழுப்பின் போது, பிராம்ப்டனில் ஒரு வெற்றிகரமான டிக்கெட் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தனது லோட்டோ டிக்கெட்டை வெளியே எடுத்து, எண்களை சரிபார்த்தார். அவரது முதல் நான்கு எண்கள் பொருத்தமாக இருப்பதைக் கண்டார்.
“நான் மிகவும் நடுங்கினேன், என்னால் தொடர முடியவில்லை,” என்று பொன்னுத்துரை கூறினார்.
மீதமுள்ள எண்களைப் படிக்க உதவுமாறு அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்தார். “ஒவ்வொரு எண்ணும் பொருந்தும்போது, என் இதயம் வேகமாக துடித்தது.” என்றார்.
இப்பொழுது கோடீஸ்வரராக மாறினாலும், சிறு உற்பத்தி நிறுவன உரிமையாளரான மனோகரன் பொன்னுத்துரை, இந்த வெற்றிக்குப் பிறகு ஓய்வு பெறத் தயாராக இல்லை என்றார். தன்னை நம்பி பணிபுரியும் ஊழியர்களை தான் கைவிடப்போவதில்லை எனவும் கூறினார்.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com
🛒 Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱