நாட்டில் வெளிவாரி நிலையில் உள்ள சீரற்ற தன்மை கருதி, எஸ்.என்ட்.பி. தரப்படுத்தல் அமைப்பு இலங்கையின் கடன் தரத்தை சிசிசி ப்ளஸில் இருந்து சிசிசி ஆகக் குறைத்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி, இது தொடர்பில் அரசாங்கம் குழப்பமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமானது அதன் முதிர்ச்சியடைகின்ற வெளிநாட்டுப் படுகடன் பொறுப்புக்களை மீளக்கொடுப்பனவு செய்வதற்குப் போதியளவு நிதியங்களை அக்கறையுடன் ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 18 ஆம் திகதி முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறி உள்ளடங்கலாக அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளைத் தீர்ப்பதற்கான வலுவான அர்ப்பணிப்பு குறித்து வழங்கப்படுகின்ற உத்தரவாதங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கையை எஸ்அன்ட் பி தரப்படுத்தல் அமைப்பு மேற்கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொவிட்-19 நோய்த்தொற்றினால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ் அன்ட் பி தரப்படுத்தல் அமைப்பின் நடவடிக்கையானது இலங்கையில் இடம்பெறுகின்ற சாதகமான அபிவிருத்திகளை இனங்காணத் தவறியுள்ளது.
குறிப்பாக பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படும் பிந்திய அபிவிருத்திகள் அத்துடன் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு ஆதரவளிப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட குறித்த தரப்படுத்தல் அமைப்பின் அவசரத்தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெருக்குவதற்கான முயற்சிகளைக் குறைத்து மதிப்பிடு செய்யப்பட்ட, இந்த தரப்படுத்தல் நடவடிக்கைகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையினையும் சாத்தியமான முதலீட்டு உட்பாய்ச்சல்களையும் பாதிக்கும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அண்மைய தரப்படுத்தல் நடவடிக்கைகள், ஒதுக்கினைக் கட்டியெழுப்பும் உத்வேகத்தினை இல்லாமல் செய்து அத்தகைய அறிவித்தல்களுக்கு எதிராகச் செயற்பட்ட முதலீட்டாளர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன.
அண்மைய கால நிதியளித்தல் ஒழுங்கேற்பாடுகள், பல்வேறு இருதரப்பு மூலங்களுடன் இலங்கை அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் இறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை உரிய காலத்தில் இடம்பெறவுள்ளன.
கொவிட்-19 நோய்த்தொற்றின் பின்னணியில், இலங்கைப் பொருளாதாரம் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து, அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன என்ற வலுவான அறிகுறிகள் காணப்படுகின்றன.
சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதுடன் ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றன.
தொழிலாளர் பணவனுப்பல்களை அதிகரித்துக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல எண்ணிக்கையான வழிமுறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com
🛒 Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱