இலங்கையின் பொருளாதாரம் மேலும்பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசாங்கம் ஒமிக்ரோனை கட்டுப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒமிக்ரோன் வேகமாக பரவுகின்றது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களால் தொழில்புரியவோ அல்லது பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கவோ முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை சந்திப்பதை தடுப்பதற்காக அரசாங்கம் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடுமையாக பாடுபட்டனர்-என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ஆனால் ஐரோப்பா ஒமிக்ரோனால் என்னபாடுபடுகின்றது என்பதை நாங்கள் பார்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் 50 வீதமானவர்கள் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்-அவர்களால் தொழில்புரிய முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்
ஒமிக்ரோன் வேகமாக பரவக்கூடியதுஆனால் உயிரிழப்புகள் குறைவு என தெரிவித்துள்ளமுன்னாள் பிரதமர் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரால் வேலைக்கு செல்ல முடியாது இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய வைரஸ் குறித்தும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிற்கு அரசாங்கம் அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் பூஸ்டர் செலுத்திக்கொள்ளவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள அவர் இது பரவலை தடுப்பதற்குஅவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com