ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை துண்டிப்போம்

மேற்குலகம் ரஸ்யாவின் எண்ணெய்க்குதடைவிதிக்க தீர்மானித்தால் ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை துண்டிக்கப்போவதாக ரஸ்யா எச்சரித்துள்ளது.

ரஸ்யாவின் எண்ணெய்க்கு மேற்குலகம் தடைவிதித்தால் அதனால் சர்வதேச விநியோகத்திற்கு மிகமோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ள ரஸ்யாவின் பிரதிபிரதமர் அலெக்ஸாண்டர் நொவாக் எண்ணெய் விலை பரல் 300 அமெரிக்க டொலராக அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவிற்கு பதிலடி கொடுப்பதற்கான உரிமையுள்ளது, என தெரிவித்துள்ள அவர் ஜேர்மனி கடந்த வாரம் இரண்டு நாடுகளிடையேயான நோர்ட் ஸ்டீரீம் எரிவாயு விநியோக குழாய்திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் மீதான இராணுவநடவடிக்கைக்கான தண்டனையாக ரஸ்யாவிற்கான எண்ணெய் விநியோகத்தை தடுப்பது குறித்து அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் ஆராய்ந்து வருகின்றது.

ஆனால் ஜேர்மனியும் நெதர்லாந்தும் அதனை நிராகரித்துள்ளன.

ஐரோப்பா தனது எரிவாயுவில் 40 வீதத்தினையும் எண்ணெயில் 30வீதத்தினையும் ரஸ்யாவிடமிருந்தே பெறுகின்றது இந்தவிநியோகம் தடைப்பட்டால் அதற்கு வேறு வழிகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்