கையிருப்பு கிடைக்காமையால், லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்கள், எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளன.
அந்த நிறுவனங்களின் தலைவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது.
இதனால், எரிவாயு கிடைக்காமையால், விநியோகத்தை இடைநிறுத்த உள்ளதாக லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டொலர் நெருக்கடியால், நாணயக் கடிதங்களை விடுவிக்க முடியாமையால், 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாணயக் கடிதங்களைத் திறக்க முடியாமையால், லாப்ஃஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர், வீட்டு சமையல் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி இருந்தது.
இந்த நிலையில், கையிருப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால், அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிவாயு விநியோகிப்பதை இடைநிறுத்தி வேண்டி ஏற்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்வதற்காக காத்திருந்தவர்கள் ஹைலெவல் வீதியில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டமையால், ஹேமாகம நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த இடத்திற்குப் பிரவேசித்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, எரிவாயுவைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com