3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.
7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது.
இதனால் இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.
கடந்த 2 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நாடு முழுவதிலும் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை எரிபொருள் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கப்பல் வருகையில் தாமதம் – லிட்ரோ அறிவிப்பு
இன்றைய தினம் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலுக்கு இலங்கையில் எரிபொருளை வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும்.
எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல், தமது எரிவாயு கொள்கலன் விநியோகத்தினை லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com