எச்சரிக்கை இலங்கையில் அதிக போலி நாணயத்தாள்கள்

தங்கல்லை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்ததெமலிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியதில் போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்கள் 11 மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்