Red Bull ஆனது, Red Bull Ride My Wave நிகழ்வின் 6ஆவது பதிப்பை அண்மையில் நிறைவு செய்தது.
இதில் உலகம் முழுவதிலுமிருந்து துறைசார்ந்த மற்றும் ஆர்வமுள்ள பெருமளவிலான நீர்ச்சறுக்கல் பங்கேற்பாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.
இலங்கையை நீர்ச்சறுக்கலுக்கான (surfing) மையமாக நிலைநிறுத்துவதும், இந்த சுவாரஸ்யமான விளையாட்டுக்கு ஒரு தளமொன்றை உருவாக்குவதுமே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
Red Bull Ride My Wave நிகழ்வானது, கடந்த ஜனவரி 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள ஹிக்கடுவையின் அழகிய கடற்கரையின் பிரதான நீர்ச்சறுக்கு மையத்தில் நடைபெற்றது’ இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்குச் செல்ல ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகும்.
Ride My Wave நிகழ்வில் 130 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றதுடன், King/Queen of the Wave (அலையின் ராஜா, அலையின் ராணி) எனும் பிரபலமான பட்டங்களுக்காக அவர்கள் போட்டியிட்டனர்’ இவ்வாண்டு Red Bull Ride My Wave ஆனது, 81 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆண் பங்கேற்பாளர்களுடன் ஆண்கள் பட்டத்திற்காக 96 சுற்றுகள் இடம்பெற்றது.
ஆண்களுக்கான தகுதிச் சுற்று 2 ஆனது, 12 சுற்றுகளைக் கொண்டிருந்ததுடன் அதில் 45 பேர் பங்கேற்றிருந்தனர்.
3ஆவது பிரதான சுற்று 18 பங்கேற்பாளர்களுடன் 6 சுற்றுகளைக் கொண்டிருந்ததுடன், அதிலிருந்து 12 பங்கேற்பாளர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். 6 நீர்ச்சறுக்கல் பங்கேற்பாளர்கள் அரையிறுதியில் பங்கேற்றதுடன் அதிலிருந்து 4 பேர் இறுதிச் சுற்றுக்கு தெரிவானதுடன், “King of the Wave” (அலையின் ராஜா) எனும் பட்டத்திற்காக அவர்கள் போட்டியிட்டனர்.
பெண்களுக்கான முதல் தகுதிச் சுற்றில் 23 பேர் கலந்து கொண்டதுடன் அது 8 சுற்றுகளைக் கொண்டிருந்தது. அதன் காலிறுதிப் போட்டிகள் 4 சுற்றுகளுடன் 16 பங்கேற்பாளர்களுடன் இடம்பெற்றிருந்தது.
அதன் அரையிறுதியில் 8 பேர் கலந்துகொண்டதோடு, 4 பேர் “Queen of the Wave” (அலையின் ராணி) பட்டத்திற்காக போட்டியிட்டனர். Red Bull Ride My Wave போட்டியின் பணிப்பாளர் சந்திக துஷார இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “Red Bull Ride My Wave போட்டியின் பெண்களுக்கான நீர்ச்சறுக்கல் பிரிவில் 30 இற்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டிருந்தமை நம்பமுடியாததாக இருந்ததோடு, இதில் இலங்கைப் பெண் நீர்ச் சறுக்கல் வீராங்கனைகளை காணக்கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நீர்ச்சறுக்கல் சமூகத்தினரை ஆதரிப்பதுடன், அவர்கள் விளையாட்டின் உண்மையான உணர்வில் போட்டியிடுவதற்காக உதவுவதில் நாம் பெருமை கொள்கிறோம்.
எதிர்காலத்தில், மேலும் பல உள்ளூர் பெண்களை கடலில் காண விரும்புகிறோம், அவர்கள் அலைகளை எதிர்கொள்ளச் செய்ய நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இவ்வாண்டு நிகழ்வில் ஒஸ்ட்ரியா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஜேர்மனி, எஸ்தோனியா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, ரஷ்யா, ஸ்வீடன், அமெரிக்கா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நீர்ச்சறுக்கல் பங்கேற்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்
இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. ஆடவர் திறந்த பிரிவு: 10.6 புள்ளிகளுடன் Steeve Seilly 3ஆவது இடத்தையும், சச்சின் தாரக 12.4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், 13.8 புள்ளிகள் பெற்ற லக்சித “லக்கி” துஷாரா ‘அலையின் ராஜா’ பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.
மாலைதீவு அணியின் முகாமையாளர் Nahu, Red Bull Ride My Wave பிரதான நடுவர் லஹிரு விதானகே மற்றும் போட்டியின் பணிப்பாளர் சந்திக துஷார ஆகியோரால் வெற்றியாளர்களுக்கு விருதுகள் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன’ மகளிர் திறந்த பிரிவு: 4.9 புள்ளிகளைப் பெற்ற Krõõt Laesson 3ஆவது இடத்தைப் பெற்றதுடன், Cameroon Heinamann 5.6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தைப் பெற்றார்.
அபாரமாக விளையாடி 11.5 புள்ளிகளைப் பெற்ற Nikita Rob தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக “அலையின் ராணி” பட்டத்தை வென்றார்.
இவர்களுக்கான பரிசுகளை முறையே ஹிமாஷி வத்சலா, ஹிருணி வத்சலா மற்றும் ஓஷி ஹேரத் ஆகியோர் வழங்கி வைத்தனர்’ இந்த முழு நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம்பெற்றதுடன், இலங்கையை இவ்விளையாட்டின் மையமாக காண்பிப்பதற்கும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ள உள்நாட்டு நீர்ச் சறுக்கல் சமூகத்திற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை உருவாக்குவதுமே Red Bull இன் நோக்கமாகும்.
Red Bull ஆனது, அனைத்து விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவதைப் போன்றே, திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், திறமையாளர்களை கண்டறியவதற்கும் உலகளாவிய ரீதியிலான தளத்தை வழங்குவதன் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க விரும்புகிறது’
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com