ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி கோரியுள்ளது.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால் குடிமக்கள் அவர்களை பதவிகளில் இருந்து நீக்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சுயாதீன அமைப்பாக இலங்கை மத்திய வங்கி மீண்டும் மாற வேண்டும்.
தற்போது மத்திய வங்கியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகவர் அல்லது கிளை போன்று செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டும் காணாத வகையில் தற்போதைய நிர்வாகம் தன்னிச்சையாக செயற்படுவது வருந்தத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com