அமெரிக்க பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது எரிபொருள் ஏற்றுமதியும் ஆயுத விற்பனையுமாகும்.
2020 ல் ஆரம்பித்த கொரானோ நெருக்கடியால் எரிபொருள் விலை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. போர்கள் நடக்காதால் ஆயுத விற்பனை முடங்கிப்போய்விட்டது. அமெரிக்கப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றதுடன் டொலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துவிட்டது.
இந்தக்காலகட்டத்திலே பிரான்ஸ் அவுஸ்திரேலியாவுடன் நீர் மூழ்க்கி கப்பல்கள் வழங்குவது தொடர்பான பாரிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது .
ஆனால் அமெரிக்கா பிரான்சுக்குத் தெரியாமல் அதன் முதுகில் குத்தி அவுஸ்திரேலியாவுடன் இரகசியமாகப் பேரம் பேசி அந்த ஒப்பந்தத்தைத் தான் எடுத்துக்கொண்டுவிட்டது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவைச் சேர்ந்திருக்காமல் ஐரோப்பா சுதந்திரமாக இருக்க வேண்டும் நேட்டோ அமைப்புக்குப் பதிலாக ஐரோப்பிய இராணுவம் ஒன்றைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று பிரான்சும் யேர்மனியும் சிந்திக்கத்தலைப்பட்டன.
அத்துடன் இந்த இரண்டு நாடுகளும் ஏற்கனவே ரஷ்யாவுடன் பொருளாதார ரீதியாக நெருங்கிவந்தன.
2012 ல் இருந்து பிரான்சும் ஜெர்மனியும் ரசியாவுடன் நெருங்க ஆரம்பித்தது தன்னுடைய நலனுக்கு ஆபத்தாக முடியும் என்று கருதிய அமெரிக்கா ஐரோப்பாவை போர் நெருக்கடிக்குள் தள்ளுவதற்கென்றே 2014 ல் உக்கிரேனில் தன்னுடைய கைப்பாவையான விளா திமிர் செலன்ஸ்கியை ஆட்சிக்குக் கொண்டுவந்தது.
யூத வம்சாவளியைக்கொண்ட இனவாதியான விளா திமிர் செலன்ஸ்கி உக்கிரேனில் வாழும் 18 மில்லியன் ரசிய மொழி பேசும் மக்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டியே ஆட்சிக்கு வந்தார்.
அதே நேரம் நியோ நாசி அமைப்புக்கள் வளர்த்துவிடப்பட்டு ஆயுதமயப்படுத்தப்பட்டன. இந்தக் குழுக்கள் உக்ரேன் இராணுவத்திலும் இணைக்கப்பட்டன.
உலகத்திலேயே நீயோ நாசிகள் பகிரங்கமாக ஆயுதம் தரிக்க அனுமதிக்கப்பட்டதும் ஒரு யூத அரசியல் தலைவருடன் சேர்ந்து செயல்பட வைக்கப்பட்டதும் யுக்கிரேனில் மட்டும் தான்.
இந்த நீயோ நாசிகள் ஒஸ்ரியா கிறிஸ் முதலான நாடுகளில் உள்ள நீயோ நாசிக் குழுக்களுடன் இரகசியத் தொடர்பைப் பேணிவந்தார்கள்.
இது எதிர்காலத்தில் யேர்மனிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
அதே நேரம் இந்த நீயோ நாசிகளை உள்ளடக்கிய உக்கிரேன் படையினரை வைத்து விளா திமிர் செலன்ஸ்கி ரசிய மொழி பேசும் உக்ரேன் மக்கள்மீது இனவெறித்தாக்குதல்களை நடத்திவித்தார்.
இந்தத் தாக்குதல்களில் 18000 வரையிலான ரசிய மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த இனப்படுகொலையை எதிர்த்து அவர்கள் போராட ஆரம்பித்ததும் இதைச் சாக்காக வைத்து நீயோநாசிகள் உள்ளடங்கிய ஒரு இலட்சத்து இருப்பத்தையாயிரம் படையினரை ரசிய எல்லையில் உள்ள டானெட்ஸ்க் மற்றும் லுகானஸ்க் மாநிலங்களில் விளா திமிர் செலன்ஸ்கி நிறுத்தி வைத்தார்.
இந்தப் படையினர் ரசிய மொழி பேசும் மக்களைத் துன்புறுத்தித் தொடர்ச்சியாகப் படுகொலை செய்ததன் மூலம் ரஷ்யாவுக்கு ஆத்திரமூட்டி வந்தனர்.
இந்தப் பின்னணியில் தான் ரசியா உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கிறது.
இந்தப் போரில் ஐரோப்பிய நாடுகள் சிக்க வைக்கப்பட்டுவிட்டன.
ரஷ்யா இறைமையுள்ள ஒரு நாட்டை ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி அதன் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டுவிட்டன.
பிரான்சும் யேர்மனியும் ரசியாவிடமிருந்து எரிவாயு உட்பட்ட பலவேறு பொருட்களைக் கொள்வனவு செய்யப் போடப்பட்ட ஒப்பந்தங்களை முறிக்க வேண்டும்.
ரசியா அணுவாயுத தாக்குதல் நடத்தலாம் என்ற பீதிக்குள் ஐரோப்பிய மக்களைத் தள்ளியாகிவிட்டது.
இந்த உக்ரேன் போரால் இன்று ஒரு பரல் மசகு எண்ணெய்யின் விலை 116 டொலராக உயர்ந்துவிட்டது.
2020ல் இது 57.40 டொலராகவும் 2021ல் 56.10 டெலராகவும் இருந்தது.
அமெரிக்கா ஒரு நாளைக்கு மூன்றரை மில்லியன் பரல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது.
இப்போது உக்ரேனில் குண்டு மழை பொழிகிறது. அமெரிக்காவில் டொலர் மழை பொழிகிறது.
உக்ரேன் போர் இன்னும் ஒரு நாட்களில் வாரங்களில் முடிந்துவிட்டாலும் உக்ரேனில் ஆயுதமயப்படுத்தபட்டுள்ள நீயோ நாசிகளாலும் வெள்ளை இனவாதிகளாலும் ஐரோப்பிய பலகலாச்சார ஜனநாயக விழுமியங்களுக்கான அச்சுறுத்தல் தொடரும் அபாயம் உள்ளது
Siva Sinnapodi
மேலும் சில விளக்கங்கள் வீடியோ வடிவில்
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com