மக்களால் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எந்த குழுவிற்கும் அதிகாரம் வழங்கும் முறைமை இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு பொறிமுறை இருந்தால் அதனை முன்வைக்குமாறு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் காட்டினால் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 எம்.பி.க்கள் வெளியேறும்போது, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? நாடு மீண்டும் அராஜகமாக மாற அனுமதிக்க முடியாது. ஈராக், ஈரான், சிரியா, லிபியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் வலுக்கட்டாயமாக கவிழ்க்கப்பட்ட நாடுகளின் நிலைமையை நாம் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை வங்குரோத்து மற்றும் வளங்களை கொள்ளையடிக்க எவரும் செயற்படுவதாக தாம் நம்பவில்லை எனவும், எவரொருவர் புரட்சியை முன்னெடுப்பார்களோ அவர்கள் தங்கள் கோரிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும், அல்லது அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலக அரசியல் வரலாற்றில் இவ்வாறானதொரு அதிகாரத்தை கையளிக்கும் முறையை தான் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
“கொவிட் காரணமாக எங்களின் பல முக்கிய வருவாய் வழிகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சுற்றுலாத் துறையிலிருந்து வருடாந்தம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுகிறோம். வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணமாக நாட்டுக்கு வருகிறது. கொவிட்-19 காரணமாக நாடு பல சந்தர்ப்பங்களில் மூடப்பட்டது. ஆனால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை வெற்றிகரமாக எடுத்தோம். இந்த உண்மைகளை மறந்துவிடக் கூடாது,” என்றார்.
“225 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக நாட்டின் நிர்வாகத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வகையில் நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைக்க முடியாது. ஏனென்றால், 225 எம்.பி.க்களையும் நீக்க வேண்டும் என இவர்கள் கூறுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





