இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை நிலைப்பாட்டை, மேலும் இறுக்கமாக்கியுள்ளது.
இதன்படி, நிலையான துணைநில் வைப்பு வசதி வீதம், 6.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
துணை நில் கடன் வசதி வீதம், 7.50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம், 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதம், 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதன திட்டங்களை பிற்போடல், மூலோபாயமற்ற மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துக்களை கண்காணித்தல் மற்றும் வெளிநாட்டு நிதி மற்றும் கடனற்ற அந்நிய செலாவணி வரவுகளை அவசர அடிப்படையில் திரட்டல் என்பன குறித்தும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com