இலங்கை – ஓமானுக்கு இடையிலான வர்த்தக உறவு

இலங்கை தேசிய சம்மேளனத்தின் அழைப்பிற்கு அமைய ஓமானை சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தை சேர்ந்த உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று வருகை தந்திருந்தது.

ஒமானை சேர்ந்த உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இதுவே முதன் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஓமானுக்கு இடையேயான இரு தரப்பு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் என்பனவற்றை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது தவிர, இருநாடுகளின் தனியார் நிறுவனங்களை ஒன்றிணைத்து வர்த்தகத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த ஆண்டில் 11கோடியே 30 லட்சம் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன், இவ்வாறான இரு தரப்பு சந்திப்புக்கள் மூலம் பரஸ்பரம் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்