புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள திருமதி இலங்கை அழகி (Mrs Sri Lanka) பட்டத்தை உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கை திருமதி அழகியை தெரிவுசெய்வதற்காக தமது அமைப்பு கொண்டுள்ள சட்டரீதியான அதிகாரத்துக்கமைய, இன்று முதல் புஷ்பிகா டி சில்வாவின் திருமதி இலங்கை அழகி பட்டத்தை, உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் எந்தவிதத்திலும் பயன்படுத்த தடை விதிப்பதாக தெரிவித்தார்.
புஷ்பிகா டி சில்வா கடந்த 2021 ஏப்ரல் 4 ஆம் திகதி திருமதி இலங்கை அழகியாக (Mrs. Sri Lanka) மகுடம் சூடினார்.
இந்நிலையில், முறையற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமான செயற்பாடுகளால், திருமதி இலங்கை அழகிக்கான ஒழுங்குவிதிகளை அவர் மீறியதன் காரணமாக இந்த பட்டத்தை அவரிடமிருந்து மீளப்பெறுவதாக திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com