தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து பாகங்களின் வளிமண்டலத்தில், தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் காலநிலையும், ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வளிமாசடைவும் இதற்குக் காரணமாகும் என தேசிய கட்டட ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் பிரிவு பணிப்பாளர் சரத் ப்ரேமசிறி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளில், மாசடைந்துள்ள வளியில் உள்ள தூசு துகள்கள், காற்றோட்டத்தின் மூலம், இலங்கையின் வளிமண்டல வலயத்தில் சேர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலேயே வளிமாசடைவு அதிகரித்துள்ளது.
அமெரிக்க தர சுட்டிக்கு அமைய, வளிமாசடைவானது, கொழும்பு, கம்பஹா, புத்தளம் முதலான பகுதிகளில் 150 என்ற புள்ளியிலும், ஏனைய பகுதிகளில் 100 புள்ளி அளவிலும் உள்ளன.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றடைந்து இடைப்பருவ பெயர்ச்சி காலநிலை ஏற்படுவதற்கான ஏதுநிலை உள்ளமையால், எதிர்வரும் சில ஓரிரு தினங்களில் இந்த நிலைமையில் மாற்றம் ஏட்படும் என தேசிய கட்டட ஆய்வு மையத்தின் சுற்றுச்சூழல் பிரிவு பணிப்பாளர் சரத் ப்ரேமசிறி எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com