கடந்த இரண்டு நாட்களுக்குள் 31,200 மெட்ரிக் தொன் சீமெந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை கட்டிடத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சீமெந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என சங்கத்தின் தலைவரான சுசந்த லியனாராச்சி வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் கடுமையான சீமெந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், நுகர்வோர் அதிகாரசபையின் விலை மற்றும் முகாமைத்துவப் பிரிவு விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ.1,575 விலையுள்ள இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து மூடை ரூ.1,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரத்தினபுரியில் சீமெந்து 2100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டையில் சீமெந்து கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இறக்குமதியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்வனவு செய்து அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் வியாபாரிகள் ஒரு மாஃபியாவை உருவாக்கியுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சட்டத்தின் பிரகாரம் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யாமல் இருப்பில் வைக்க முடியாது.

சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் பொருட்களின் விலைக்கு மத்தியில் நிர்மாணத்துறையை பேண முடியுமா என்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் , இது தொடர்பில் கடந்த காலங்களில் பிரதமர், நிதியமைச்சர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டது என்றார்.

அவர்கள் பல பதில்களைப் பெற்றதாகவும், இருப்பினும் கடுமையான உத்தரவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். தவறினால் தொழில் நலிவடையும்.

டொலர் தட்டுப்பாட்டால் இறக்குமதியை கட்டுப்படுத்துவது மாஃபியாவை உருவாக்கி சீமெந்து விலை அதிகரிப்பதற்கு வழிவகுத்ததா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​அனைத்து இறக்குமதியாளர்களும் கடன் பத்திரங்களைத் திறப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதால் டொலர் தட்டுப்பாடு தெளிவாகத் தெரிகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வங்கிகளில் டொலர்கள் கிடைக்காவிட்டாலும் ஏனைய நிறுவனங்களில் டொலர்களை ரூ.245-250க்கு கொள்வ னவு செய்யலாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

டொலர்களை பெறக்கூடியவர்கள் சீமெந்தை இறக்குமதி செய்து இந்த மாஃபியாவில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com