இலங்கையின் கடன் தரம் CCC ஆக குறைவடைந்துள்ளது

நாட்டின் வெளிவாரி நிலையில் உள்ள சீரற்ற தன்மை கருதி, S&P தரப்படுத்தல் அமைப்பு இலங்கையின் கடன் தரத்தை CCC+ இல் இருந்து CCC ஆக குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ் அன்ட் பி மூலமான நியாயமற்ற தரப்படுத்தல் நடவடிக்கை

இலங்கை அரசாங்கமானது அதன் முதிர்ச்சியடைகின்ற வெளிநாட்டுப் படுகடன் பொறுப்புக்களை மீளக்கொடுப்பனவு செய்வதற்குப் போதியளவு நிதியங்களை அக்கறையுடன் ஏற்பாடுசெய்துள்ள காலகட்டத்தில் அத்துடன் 2022 சனவரி 18 அன்று முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறி உள்ளடங்கலாக அதன் படுகடன் தீர்ப்பனவுக் கடப்பாடுகளைத் தீர்ப்பதற்கான வலுவான அர்ப்பணிப்பு பற்றி அது மீண்டும் மீண்டும் வழங்கும் உத்தரவாதங்களுக்கு மத்தியில் எஸ் அன்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் மூலமான இன்றைய அறிவிப்பு பற்றி இலங்கை அரசாங்கம் குழப்பமடைந்துள்ளது.

நாட்டிற்கான பன்னாட்டு முறிக் கடப்பாடுகளைத் தீர்ப்பனவு செய்வதற்கு சற்று முன்னர், தரப்படுத்தல் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முனைகின்ற எஸ் அன்ட் பி மற்றும் வேறு தரப்படுத்தல் முகவராண்மைகளும் மீண்டும் மீண்டும் ஒரேவிதமாக செயற்படும் தன்மையினையே இந்நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் திரும்பத் திரும்பத் தோன்றுகின்ற அலைகளுடன் ஒட்டுமொத்த உலகமும் போராடுகின்ற சூழ்நிலையில் எஸ் அன்ட் பி இன் நடவடிக்கையானது இலங்கையில் இடம்பெறுகின்ற சாதகமான அபிவிருத்திகளை இனங்காணத் தவறியுள்ளது. குறிப்பாக பொருளாதரத்தின் அனைத்து துறைகளிலும் காணப்படும் பிந்திய அபிவிருத்திகள் அத்துடன் வெளிநாட்டு செலாவணி உட்பாய்ச்சல்களுக்கு ஆதரவளிப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் என்பன பற்றி எஸ் அன்ட் பி இலங்கை அதிகாரிகளால் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்பட்டு வந்திருந்தும் கூட பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தல் முகவராண்மையொன்றின் அவசரத்தன்மை ஏற்றுக்கொள்ள முடியாததாகும். உண்மையில், வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெருக்குவதற்கான அதிகாரிகளின் முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட்டு தாமதப்படுத்தியுள்ள மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட இத்தரப்படுத்தல் நடவடிக்கைகள், முதலீட்டாளர் நம்பிக்கையினையும் சாத்தியமான முதலீட்டு உட்பாய்ச்சல்களையும் அதேபோன்று நாட்டின் அலுவல்சார் ஒதுக்குகளைப் படிப்படியாக கட்டியெழுப்புவதனையும் எதிர்மறையாகப் பாதித்துள்ளன. அண்மைய தரப்படுத்தல் நடவடிக்கைகள், ஒதுக்கினைக் கட்டியெழுப்பும் உத்வேகத்தினை இல்லாமல்செய்து அத்தகைய அறிவித்தல்களுக்கு எதிராகச் செயற்பட்ட முதலீட்டாளர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன.

எதிர்பார்க்காத சாதகமான அபிவிருத்திகள் பற்றிய எஸ் அன்ட் பி இன் கோரிக்கைக்கு எதிராக, முக்கிய பொருளாதார மற்றும் நிதியியல் குறிகாட்டிகள், இலங்கை அரசாங்கத்தின் அண்மைய வரவுசெலவுத் திட்ட அறிக்கையிலும் இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாத வழிகாட்டல் அறிவிப்பிலும் வெளிப்படுத்தப்பட்ட வழிமுறைகளுடனும் திட்டங்களுடனும் அணிசேர்ந்துள்ளன. அண்மைய கால நிதியளித்தல் ஒழுங்கேற்பாடுகள், பல்வேறு இருதரப்பு மூலங்களுடன் இலங்கை அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கினாலும் இறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை உரிய காலத்தில் இடம்பெறவுள்ளன. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பின்னனியில், இலங்கைப் பொருளாதாரம் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து, அனைத்து குறிகாட்டிகளும் சாதகமான உத்வேகத்தினை சமிக்ஞைப்படுத்துவதுடன் இணைந்து பொருளாதார நடவடிக்கைகள் தற்போது இயல்புநிலைக்கு திரும்புகின்றன என்ற வலுவான அறிகுறிகள் காணப்படுகின்றன. சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதுடன் ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றன. தொழிலாளர் பணவனுப்பல்களை அதிகரித்துக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல எண்ணிக்கையான வழிமுறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை விளைவிக்கின்றன. உயர்மட்ட ஈடுபாடுகள் ஊடாக அயல் நாடுகளுடன் திரவத்தன்மை வசதிப்படுத்தல்கள் மற்றும் வர்த்தக நிதியளித்தல்கள் அத்துடன் மத்திய வங்கி பரஸ்பரப்பரிமாற்றல் ஒப்பந்த உடன்படிக்கைகள் உள்ளடங்கலாக அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கான நிதியளித்தல் முயற்சிகள் கலந்துரையாடப்படுகின்றன. இவ்வசதிகள், இலங்கைப் பொருளாதாரத்தினை வலிமைப்படுத்துமெனவும் விரைவாக மீட்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆறு மாத வழிகாட்டலில் எதிர்நோக்கப்பட்டவாறு எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் நிகழ்கின்றமையின் காரணமாக 2021இன் இறுதியில் ஒதுக்குநிலை ஐ.அ.டொலர் 3 பில்லியன் மட்டத்தினை எட்டியதுடன் படுகடனின்மை மற்றும் நிதியிடல் உட்பாய்ச்சல்கள் இரண்டுடனும் இணைந்து படிப்படியாகக் உயர்வடைவதனூடாக அண்மைய காலத்தில் அத்தகைய மட்டத்தில் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, இலங்கை அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் கடந்த அண்மையக் காலப்பகுதியில் எடுக்கப்பட்ட பல்வேறு வழிமுறைகளின் காரணமாக, வெளிநாட்டு நாணய படுகடன் அளவு குறைவடைந்துள்ளது. ஆகையினால், நாட்டின் படுகடன் பட்டியல்களின் ஒட்டுமொத்த அளவுகளுக்கும் எதிராக ஒதுக்கு மட்டங்களின் பெறுமதியினை மாத்திரம் முற்றுமுழுதாகக் கருத்திற்கொள்வது பொருத்தமற்றது.

எனவே, தரப்படுத்தலை தரங்குறைப்பதற்கான எஸ் அன்ட் பி இன் கணிப்பீடானது அரசாங்கத்தின் எதிர்வரவுள்ள படுகடன் கடப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால முன்னேற்றத்தினை அங்கீகரிப்பதற்கு தெட்டத்தெளிவாகத் தவறியுள்ளது.

இப்பின்னடைவுக்கெதிராக எதிர்வரவுள்ள காலப்பகுதியில் அனைத்து வரவிருக்கும் கடப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கும் அதன் கலங்கமற்ற படுகடன் தீர்ப்பனவுப் பதிவினைப் பேணுவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது என்பதனை பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் உள்ளடங்கலாக அனைத்து ஆர்வலர்களுக்கும் அரசாங்கம் மீளவும் உறுதிப்படுத்துகின்றது. முதலீட்டாளர்களுடனான நேரடி ஈடுபாட்டை இலங்கை அதிகாரிகளும் வரவேற்பதுடன் வெளிவாரி முகவராண்மைகளின் அவ்வாறான அடிப்படையற்ற அறிவிப்புக்களினால் குழப்பமடையாது கிரமமான ஒருவருக்கொருவர் நேரடி கலந்துரையாடல்களுக்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுக்கின்றனர்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்